யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்..! பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மணல் கள்ளர்கள் அட்டூழியம்..

யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் மணல் ஏற்றுவதில் உருவான தர்க்கம் வாள்வெட்டில் முடிந்திருக்கும் நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. மணல் ஏற்றுவதில் இரு தரப்பினர் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியிருக்கின்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத் தில் 50 வயதான ஒருவர் படுகாயமடைந்த நிலையில்
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.