யாழ்.பண்டத்தரிப்பில் சுகாதார நடைமுறைளை மீறி திருமணம்! மணமகனுக்கு 20 ஆயிரம் தண்டம், திருமணத்தில் கலந்துகொண்ட 41 பேருக்கு தனித்தனியாக குற்றப்பத்திரம் தாக்கல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்டத்தரிப்பில் சுகாதார நடைமுறைளை மீறி திருமணம்! மணமகனுக்கு 20 ஆயிரம் தண்டம், திருமணத்தில் கலந்துகொண்ட 41 பேருக்கு தனித்தனியாக குற்றப்பத்திரம் தாக்கல்..

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணத்தடை காலத்தில் திருமண நிகழ்வு நடத்தியமை தொடர்பில் மல்லாகம் நீதிமன்றம் மணமகனை கடுமையாக எச்சரித்துள்ளதுடன், 20 ஆயிரம் தண்டம் விதித்துள்ளது. 

மேலும் திருமணத்தில் கலந்து கொண்டிருந்த 39 பேருக்கு எதிராகவும், மண்டபம் வழங்கிய 2 பேருக்கு எதிராகவும் தனித்தனியாக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு - பிரான்பற்றில்

இம்மாத தொடக்கத்தில் திருமண நிகழ்வு நடைபெற்றிருந்தபோது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சுகாதார வைத்திய அதிகாரியால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கு மாறாக பலரை கூட்டி திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் தகவலறிந்த சுகாதார பிரிவினர் திருண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சுமார் 47 குடும்பங்களை தனிமைப்படுத்தியிருந்தனர். கடந்த 16ம் திகதி நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரினால் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பணத்தடை காலத்தில் வழங்கப்பட்ட அனுமதிக்கு மாறாக திருமணம் நடத்தப்பட்டதாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

திருமணத்திற்கான அனுமதி மணமகனின் பெயருக்கே வழங்கப்பட்டிருந்த நிலையில் அவரையே பிரதிவாதியாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் மன்றில் கடுமையான எச்சரிக்கை விடுத்த நீதிவான் இந்த குற்றத்திற்காக 6 மாதங்கள் சிறைத்தண்டனை

வழங்க முடியும் என எச்சரித்ததுடன் நெருக்கடியான சூழலில் சுகாதார பிரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்படும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை நீதிவான் கண்டித்ததுடன் 20 ஆயிரம் ரூபாண் தண்டம் விதித்த நீதிவான், 

மணமகனின் சகோதரன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் தொடர்பான தகவல்களை சுகாதார பிரிவினருக்கு வழங்குமாறும் மன்று பணித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு