யாழ்.குருநகரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படவுள்ளது..! கடந்த ஒரு வாரத்தில் 125 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படவுள்ளது..! கடந்த ஒரு வாரத்தில் 125 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் நடவடிக்கை..

யாழ்.குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவு தொிவித்திருக்கின்றது. 

குருநகர் பகுதியில் ஜே/69, ஜே/71 கிராம சேவகர் பிரிவுகளில் கடந்த ஒருவாரத்தில் சுமார் 125ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, 

மேற்படி இரு கிராமசேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவெளை குறித்த விடயம் தொடர்பாக, 

யாழ்.மாவட்ட செயலரும், மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியன் இணை தலைவருமான க.மகேஸனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 

அவ்வாறான பரிந்துரை தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொிவித்திருக்கின்றார். 

Radio