யாழ்.மாவட்டத்தில் அதிகம் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் குழந்தைகள்! பிறந்து 49 நாட்களான சிசு உட்பட 9 குழுந்தைகளுக்கு தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் பிறந்து 49 நாட்களேயான சிசு உட்பட 9 சிறுவர்களுக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழகம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்த விடயம் வெளியானது.
தெல்லிப்பழை ஆதார மருத்துவ மனையில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் பிறந்து 49 நாட்களேயான சிசுவும், 12 வயது சிறுமியும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இதேபோன்று, மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையிலும் 6 மாத பெண் குழந்தையும், 3 வயது பெண் குழந்தையும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
சங்கானையில் 15 வயது சிறுவ னும், காரைநகரில் 15 வயது சிறுவனும், 13 வயது சிறுமியும், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் 14 வயது சிறுமியும்,
சண்டிலிப்பாயில் 17 வயது சிறுவனுமாக நேற்று மட்டும் 9 குழந்தைகள், சிறுவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இதேவேளை, அண்மை நாட்களாக குழந்தைகள், சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.