அளவுக்கதிகமான மதுபானம் கொள்வனவு செய்ததாக குற்றச்சாட்டு! யாழ்.நகரில் ஒருவர் கைது..

நாடு முழுவதும் பயணத்தடை தளர்த்தப்பட்டு மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் அளவுக்கதிகமான மதுபானம் கொள்வனவு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை யாழ்.நகரில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் ஒருவர் கொள்வனவு செய்து கொண்டு செல்லக்கூடிய நிர்ணய அளவுக்கு மேல் மதுபானம் இருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டே கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.