SuperTopAds

பயணத்தடை நாளை அதிகாலை தளர்த்தப்படும்போது மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்! பொலிஸ்மா அதிபர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை நாளை அதிகாலை தளர்த்தப்படும்போது மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்! பொலிஸ்மா அதிபர் விளக்கம்..

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண விளக்கமளித்துள்ளார். 

இதன்படி பின்வரும் நடைமுறைகளை இறுக்கமான கடைப்பிடிக்கவேண்டும். என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. 

1- அலுவலகளுக்கு சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே வரவழைக்க முடியும்.

2- வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

3- பொது போக்குவரத்தில், பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.

4- ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.

5- தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

6- மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட மாட்டாது.

7- உல்லாசப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை.8- பொது இடங்களில் கூட்டமாக இருக்க கூடாது.