பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் மிக இறுக்கமான கட்டுப்பாடு தொடரும்! ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் மிக இறுக்கமான கட்டுப்பாடு தொடரும்! ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் தொடரும். என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்திருக்கின்றது. 

இன்று காலை கூடிய தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் 21ம் திகதி காலை பயணத்தடையை நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். 

குறிப்பாக மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும்,அதேபோல் கொவிட் அல்லாத மரணங்களுக்கு 24 மணித்தியாலத்திற்குள் இறுதிக்கிரியை நடத்த அனுமதிக்கவேண்டும். 

மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். குறிப்பாக திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை நீடிக்கும், மேலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்

மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் சேவையில் ஈடுபடவேண்டும். வர்த்தக நிலையங்களிலும் மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் பணிகள் இடம்பெறவேண்டும். இவ்வாறான கட்டுப்பாடுகள் தொடர்நதும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு