இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய ”டெல்டா வகை B.1.617.2“ ஆபத்தான வைரஸ் இலங்கையில் சமூக மட்டத்தில் அடையாளம் காணப்பட்டது..
இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய டெல்டா வகை B.1.617.2 கொரோனா வைரஸ் இலங்கையில் சமூக மட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதான வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
கடந்த முறை அடையாளம் காணப்பட்ட B117 வைரஸ் பிரிவை விடவும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வகை B.1.617.2 என்ற வைரஸ் 50 வீதம் வீரியம் கொண்டது என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
கொவிட் தடுப்பூசியின் ஒரு DOSE பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.