சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி தனியார் வகுப்பு! 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி நடத்தப்பட்ட தனியார் கல்வி நிலையத்தில் பங்கெடுத்த 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
கட்டுப்பாடுகளை மீறி தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து கட்டுகஸ்தோட்டை, ரனவன வீதியில் தங்குமிடத்துடன் நடத்தப்பட்ட தனியார் வகுப்பொன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
அங்கு 52 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். க.பொ.த. உயர்தர வகுப்பில் சித்தியடையாத மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு பெற்றோரின் அனுமதியுடன் தங்கவைக்கப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
அதில் ஒரு மாணவனுக்கு சுகயீனம் ஏற்பட்டதன் விளைவாக அவர் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டபோது கொவிட் தொற்று உறுதியானது.இதனையடுத்து பொலிசாரும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து மேற்படி இடத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு 52 மாணவர்கள் தங்கி கல்வி கற்ற விடயம் தெரியவந்தது. 52 மாணவர்களும் 6 ஆசிரியர்களுமாக 58 பேரும் அவ்விடத்திலே தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது
அவர்களில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.