SuperTopAds

7 மாத கர்ப்பவதியான மனைவியை 28 கிலோ மீற்றர் மழை வெள்ளத்திற்கு நடுவே துாக்கி சென்று வைத்தியசாலையல் அனுமதித்த இளைஞன். இலங்கையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
7 மாத கர்ப்பவதியான மனைவியை 28 கிலோ மீற்றர் மழை வெள்ளத்திற்கு நடுவே துாக்கி சென்று வைத்தியசாலையல் அனுமதித்த இளைஞன். இலங்கையில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்..

மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பவதியான மனைவியை 28 கிலோ மீற்றர் துாரம் துாக்கி சென்று வைத்தியசாலையில் அனுமதித்த 28 வயதான தமிழ் இளைஞன் குறித்த சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனி ஆகும். 

சாந்தனியின் தாய் தந்தையரும் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள். அவர்களைப் போலவே சாந்தனியின் கணவரான குமாரும் கொழுந்து பறிக்கும் தொழிலையே 

தனது வாழ்வாதாரமாக செய்து வந்தார். தற்போது நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அந்த தொழிலுமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுகின்றனர். 

சம்பவம் தொடர்பில் விவரித்த குமார்..

சம்பவ தினத்துக்கு முன்னைய தினமான 3 ஆம் திகதி வியாழக்கிழமை காலையில் இருந்து கடும் மழை பெய்தது. ஆற்று பெருக்கத்ததினால் மறுநாள் அதாவது சம்பவம் நடந்த 4 ஆம் திகதியன்று வீதிகள் எங்கும் பெரும் வெள்ளம் காணப்பட்டது.

7 மாத கர்ப்பிணித் தாயான சாந்தனியின் வயிற்றிலுள்ள சிசு இரண்டு நாட்களாக துடிக்காத காரணத்தால் எமது பகுதிக்கு பொறுப்பான ‘மிட் வைப்’ (குடும்ப நலத்தாதி) 5 மணித்தியாலங்களுக்குள் ஹினிதும வைத்தியசாலைக்கு 

கொண்டு சேர்க்கும்படி அறிவுறுத்தினார். வெள்ளம் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாததால், எனது மனைவியை தூக்கிக்கொண்டு செல்ல முற்பட்டேன். இது கஷ்டான காரியமென்றாலும், எப்படியாவது 

மனைவியை வைத்தியாலைக்கு அழைத்துச் சென்று எமக்கு பிறக்கப்போகும் முதல் குழந்தையை காப்பாற்ற வேண்டுமென்றே எனது மனதில் ஓடியது. மனைவியைத் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் சிலர் எமக்கு உதவினார்கள். 

எனக்கு களைப்பு ஏற்படும்போது, எனது நிலையறிந்து என் மனைவி சில தூரம் நடந்து வந்தார். எனினும், அவள் களைப்படைந்து காணப்படும்போது நான் மீண்டும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலை நோக்கி நடந்து ஒருவாறு வைத்தியசாலையை அடைந்தேன் என்றார். 

வைத்தியசாலைச்குச் சென்ற குமாருக்கும் சாந்தனிக்கும் ஹினிதும வைத்திசாலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால், இவருக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ வசதிகள் எமது வைத்தியசாலையில் இல்லை.

உடனடியாக உடுகம வைத்திசாலைக்கு அனுமதிக்குமாறு அங்குள்ள தாதியொருவர் கூறியமையே ஆகும். மேலும், நீங்கள் எவ்வாறு செல்வீர்கள். வீதியெங்கும் வெள்ள நீர் காணப்படுவதால் வாகனமொன்றைக்கூட கொடுக்க முடியாதுள்ளது  

என அந்த தாதி கூறியுள்ளார். ஹினிதும வைத்தியசாலையிலிருந்து 22 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் உடுகம வைத்தியசாலை உள்ளது. தனது தைரியத்தை கைவிடாது நம்பிக்கையுடன் உடுகம வைத்தியசாலை நோக்கி மீண்டும் தனது மனைவியை தூக்கிக் கொண்டு 

நடந்து சென்றார் குமார். ஹினிதும கல்வாரி தேவாலயத்தை நெருங்கிக்கொண்டிருந்வேளையில், அந்த பகுதியால் வந்த ஷெஹான் மாலக்க கமகே என்பவர் எமக்கு உதவிசெய்தார். அவர் எங்களை படம்பிடித்து எமது நிலை குறித்து 

தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்தார். இதன்பின்னர் , நான் எனது மனைவியைத் மீண்டும் தூக்கிக்கொண்டு உடுகம வைத்திசாலையை நோக்கிச் சென்றேன். இடையில் களைப்பாகும் போது எனது மனைவி இறங்கி நடந்து வந்தார். 

இவ்வாறு சற்று ஓய்வெடுத்துக்கொண்டு ஹினிதுமயிலிருந்து உடுகம வைத்தியசாலைக்கு சென்றோம் என்றார்.