கல்வி அமைச்சின் செயலாளர் மாபியா போன்று செயற்படுகிறார்.

ஆசிரியர் - Editor I
கல்வி அமைச்சின் செயலாளர் மாபியா போன்று செயற்படுகிறார்.

நிர்வாக சேவை உயர் அதிகாரிகள் பலர் வடக்கு மாகாணத்தில் 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஒரு மாபியா போன்று செயற்படும் அவர்கள் ஆளுநர் உத்தரவைக் கூட மதிப்பதில்லை என முதலமைச்சர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த ஆர்.ரவீந்திரன் வட மாகாண மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக ஆளுநரால் கொழும்புக்கு இடமாற்றப்பட்டு ஒரு வாரம் கடந்தும் தொடர்ந்தும் மாகாண கல்வி அமைச்சில் இருந்து விலகிச் செல்லவில்லை என முதலமைச்சர் அலுலகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவீந்திரனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பொதுச் சேவை ஆணைக்குழுவை அணுகி தனது இடமாற்றத்தை பிற்போட்டார். இது குறித்து முதலமைச்சருக்கோ அல்லது அவரது அமைச்சருக்கோ கூட அறிவிக்கவில்லை. அதன் பின்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தலை காரணம் காட்டி மேலும் கால நீடிப்பு பெற்றுக்கொண்டார்.

10 நாட்களுக்கு முன்னர் இந்த இடமாற்றம் குறித்து முதலமைச்சர் பேசியபோது ஆளுநர் என்னை விடுவிக்கவிவில்லை. ஆதனால் மாற்றலாகிச் செல்லவில்லை என ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாகவே ஆளுநரைத் தொடர்புகொண்ட முதலமைச்சர் இது விடயம் குறித்து பேசினார். ஆதன் பின்னர் ஆளுநரிடம் இருந்து மாற்றல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை ரவீந்திரன் முன்னைய கடமையில் தொடர்கிறார்.

அரச நிர்வாக சேவையில் அதி சிறப்பு தரத்திலுள்ள பலர் வடக்கு மாகாண சபையில்  இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றுகின்றனர். 

ஆளிநரின் உத்தரவைக் கூட  மீறி மாபியா போன்று  அவர் செயற்படுகின்றனர் எனவும் இது குறித்து முதலமைச்சர் விசனம் வெளியிட்டுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு