மண்சரிவில் சிக்கிய குடும்பம் - சடலங்களை காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்!

ஆசிரியர் - Admin
மண்சரிவில் சிக்கிய குடும்பம் - சடலங்களை காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்!

மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், சடலங்கள் நேற்று மீட்கப்பட்டனர். 

வீடொன்றின் மீது மண்மேடு, சரிந்து விழுந்ததிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை (வயது 57), தாய் (53 வயது), மகன் (வயது 34) மற்றும் 27 வயதான மகள் ஆகியோர் மரணமடைந்தனர்.

சம்பவத்தை அடுத்து விரைந்து சென்ற இராணுவத்தினரும், பொதுமக்களும், மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

அப்​போது அங்கு நாயொன்று ஓடிவந்துள்ளது. அங்கிருந்தவர்கள், அதனை விரட்டியடித்துவிட்டனர். எனினும், திரும்பி, திரும்பி வந்த அந்த நாய், மண்​மேடு சரிந்திருக்கும் சேற்றுக்குள் செல்ல முயன்றது.

எனினும், திரும்பித் திரும்பி வந்தமையால், மீட்பு பணியாளர்கள் விட்டுவிட்டனர். அந்த நாய், தனது முன்னங்கால் பாதங்களால் ஓரிடத்தில் சேற்றைத் தோண்டத் தொடங்கியது.

சேற்று மலைக்குள் புதையுண்ட குடும்ப உறுப்பினர்களை எங்கு தேடுவது என சிந்தித்துக் கொண்டிருந்த மீட்பு பணியாளர்களுக்கு அந்நாயே ஒரு துப்பு கொடுத்தது. அந்த இடத்திலிருந்த சடலங்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நாய், சேற்று மலைக்குள் புதையுண்டு சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட செல்ல நாய் என்ப​தை பின்னர் அறிந்து​கொள்ள முடிந்தது.

Radio