SuperTopAds

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஆசிரியர் - Admin
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி, மின்சாரம், வீதி அபிவிருத்தி, போக்குவரத்து உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டது. 

முன்னதாக மறைந்த பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் மற்றும் உதவி அரசாங்க அதிபராக இருந்த ஐயாத்துரை ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாது அவை தொடர்ந்தும் தீர்மானங்களாக இருப்பது தொர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட அதேவேளை இன்றும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.