50 மாணவர்களுடன் இரகசியமாக இடம்பெற்ற தனியார் வகுப்பு முற்றுகை..! 9 நிர்வாகிகள் கைது..

ஆசிரியர் - Editor I
50 மாணவர்களுடன் இரகசியமாக இடம்பெற்ற தனியார் வகுப்பு முற்றுகை..! 9 நிர்வாகிகள் கைது..

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி 50 மாணவர்களுடன் இரகசியமாக நடைபெற்றிருந்த தனியார் வகுப்பு முற்றுகையிடப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கண்டி - கட்டுக்கஸ்தோட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிலையத்தில் 50 மாணவ , மாணவிகளை தங்கவைத்து வகுப்புகளை நடத்தியுள்ளதாக 

பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் வகுப்புகளை நடத்தியமை 

 குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாக குழுவைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 

நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Radio