யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரமாக காணப்படுகிறது..! நேற்றும் 122 பேருக்கு தொற்று, மாவட்ட செயலர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரமாக காணப்படுகிறது..! நேற்றும் 122 பேருக்கு தொற்று, மாவட்ட செயலர் அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3144 ஆக உயர்ந்துள்ளது. எனவும் அவர் கூறியுள்ளார். 

சமகால இடர்நிலை தொடர்பாக இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இணுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராமம் இன்று காலையில் இருந்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று கிராமங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கிடைத்த 50ஆயிரம் தடுப்பூசிகளில் அனைத்து தடுப்பூசிகளும் முடிவுறுத்தப்பட்டுள்ளன. 

உயர் ஒவ்வாமை போன்ற காரணங்களுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு வழங்கவென 500 தடுப்பூசிகள் பிரதேச வைத்திய சாலைகளுக்கும் போதனா வைத்தியசாலைக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனைவிட சுமார் 1600 தடுப்பூசிகள் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் 

கல்விசாரா உத்தியோகத்தர்களுக்குமென1600 ஒதுக்கீடு செய்யப்பட்டது.  4 பிரதேச செயலர் பிரிவில் எஞ்சிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன .தெல்லிப்பழை, உடுவில் ஊர்காவற்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் எஞ்சிய தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டது.  

அத்துடன் யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முடிவுறுத்தப் பட்டுள்ளன தற்பொழுது கிடைத்திருக்கின்ற முதற்கட்ட தடுப்பூசிகள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 61 கிராம சேவகர் பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

எனினும் பின்னர் கிராம உத்தியோகத்தர் பிரிவு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக 96 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பகுதி அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைக்கு அனைத்து மக்களும் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். 

ஆகவே அடுத்த கட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மிகுதி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு