நாட்டில் நடைமுறையில் உள்ள பயண கட்டுப்பாடு குறித்து இராணுவ தளபதி கருத்து..! தொடர்ந்து அவதானிக்கிறோம் என்கிறார்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் நடைமுறையில் உள்ள பயண கட்டுப்பாடு குறித்து இராணுவ தளபதி கருத்து..! தொடர்ந்து அவதானிக்கிறோம் என்கிறார்..

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையினால் உருவான நன்மை, தீமைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இன்று இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவுவதைக் குறைக்க பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் வார இறுதியில் இந்த முறை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

அதன்படி பயணக் கட்டுப்பாடு இதுவரை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை மக்கள் தவறாக பயன்படுத்த முயற்சித்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், பயணத் தடையின் போது அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டிருந்தமை காரணமாக இது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு