கிளி.முழங்காவிலில் கிராமசேவகர் அட்டகாசம் முதலமைச்சரின் கவனத்தைகோரும் மக்கள்.

கிளிநொச்சி –முழங்காவில் அன்புபுரம் கிராமசேவகரும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் மக்க ளுடைய வாழ்வாதாரத்தை பறிப்பதுடன், மக்களுக்கு கிடைக்கவேண்டிய வீட்டு திட்டங்களை வேறு கிராம மக்களுக்கு கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டும் அன்புபுரம் கிராம மக்கள், முத லமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கூறினர்.
மேற்படி விடயம் தொடர்பாக அன்புபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் கிராம அபி விருத்தி சங்க தலைவர் எஸ்.சிவபாதம் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், அன்புபுரம் கிராம த்தில் போர் காரணமாக வேறு இடங்களிலிருந்து வந்த மக்கள் குடியேறி வாழ்ந்து கொண்டிரு க்கின்றார்கள். வாழ்வாதாரரீதியாக அதிகம் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் பல்வேறு பிரச்சி
னைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு அன்புபுரம் கிராமத்தின் கிராமசேவக ர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தில் உள்ள சிலர் மட்டுமே காரணமானவர்கள். இவர்கள் அன்புபுரம் கிராமத்திற்கு வந்த 7 வீடுகளை வேறு கிராமங்களுக்கு மாற்றி கொடுத்துள்ளார்கள். இதேபோல் அன்புபுரம் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு மாலைநேர கல்விக்காக கட்டப்ப
ட்டிருந்த கட்டிடத்தை இடித்து மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது மட்டுமல்லாமல் இ டிக்கப்பட்ட கட்டிடத்திலிருந்த மரங்களை விற்பனை செய்துள்ளார்கள். மேலும் கிராம சேவக ருக்கு ஆதரவான ஒருவருக்கு ஒரு காணியில் 3 வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் அன்புபுரம் கிராம மக்களுக்காக கொடுக்கப்படும் வாழ்வாதார உதவிகள் எவையும்
உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அன்புபுரம் கடற்றொழிலாளர் சங்கத்தில் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த ஊழல்கள் தொடர்பில் இதுவரை விசாரிக்க ப்படவில்லை. விசாரிப்பதற்கு கிராம சேவகரும் கிராம அபிவிருத்தி சங்கத்தில் உள்ள சிலரும் இடமளிக்கவில்லை. இவ்வாறு கிராம சேவகரும், கிராம அபிவிருத்தி சங்கத்தில் உள்ள சிலரு
ம் தொடர்ச்சியாக அன்புபுரம் கிராமத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் செயற்பட்டுக் கொ ண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் எமது கிராமத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கத்தில் இ டம்பெற்ற ஊழல்கள் தொடர்பிலும், கிராம அபிவிருத்தி சங்கம் செய்து வரும் ஊழல்கள் தொ டர்பிலும் ஆராய்வதற்காக மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சரையும், கூட்டுறவு அமைச்
சரையும் எங்கள் கிராமத்திற்கு அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வடமா காண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆவண செய்யவேண்டும் என அவர் மேலும் கேட் டுக் கொண்டார்.