பயண தடை 7ம் திகதி நிச்சயம் தளர்த்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..! மக்களின் கைகளிலேயே எல்லாம் உள்ளது..
நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள காலத்தில் பொதுமக்கள் நடந்து கொள்ளும் முறையிலேயே பயணத்தடை நீடிப்பதா? இல்லையா? என்பதை அரசு தீர்மானிக்கும் என பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் நாட்களில் பொதுமக்களின் நடவடிக்கைகளே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை தீர்மானிக்கும் நடைமுறையில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றினால் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால்
8 ம் திகதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து கட்டுப்பாடுகளிற்கு மத்தியில் கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களிற்கு மருந்தகங்களை மாத்திரம் திறக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். கடைகளை திறக்க அனுமதிக்கமாட்டார்கள் பொதுப்போக்குவரத்தும் இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.