நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்திருக்கும் எச்சரிக்கை..!
நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுகாதார பாதுகாப்பு நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்தும் நடந்து கொண்டால் இந்தியாவைபோல் நிலமை மோசமாகும்.
மேற்கண்டவாறு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந் நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹேமாந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கும் மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற தடைகள் தொடர்பான முடிவுகளை அரசாங்கமும் அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர்.
எனவே கொவிட்-19 தொடர்பில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.