கொழும்பில் உள்ள பணக்காரர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மாட்டோம்..! அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தரமான பதில்..
கொழும்பில் உள்ள பணக்காரர்களுடைய கோரிக்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இணங்கினால் நாட்டிலுள்ள பெரும்பான்மையான நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே அரசாங்கம் இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான நடுத்தர மற்றும் ஏழை மக்களுடைய நலன்களையே அதிகம் கவனத்தில் கொள்ளும். கொழும்பு 7ல் உள்ள பணக்காரர்களின் கோரிக்யை கருத்தில் எடுக்க முடியாது.
மேற்கண்டவாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டார். கொழும்பு 07 இல் உள்ள செல்வந்தர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு
சில முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார். நாளாந்தம் ஊதியம்பெறும் மக்கள் தொடர்பாக சிந்திக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர், அடுத்த வாரத்திற்குள் அரசாங்கம் நிலைமையை
மதிப்பாய்வு செய்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறினார்.