SuperTopAds

தனியார்துறைக்கு தொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..! கொரேனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
தனியார்துறைக்கு தொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..! கொரேனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால் நடவடிக்கை..

தனியார்துறையில் பணியாற்றும் கர்ப்பவதி பெண்களையும் கடமைக்கு அழைக்கவேண்டாம். என தொழில் திணைக்களம் தனியார் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. 

கொவிட் -19 தொற்றிலிருந்து கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாக்கும் வகையில் மேற்படி கோரிக்கையானது முன்வைக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் தொழிலாளர் ஆணையளரான ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் 

தனியார் நிறுவனங்களின் முகாமைத்துவத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு 

கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே தங்க அனுமதிக்குமாறும் தனியார் துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.