SuperTopAds

இந்திய திரிபு B 1.617 கொரோனா வைரஸ் இலங்கையில் சமூகமட்டத்தில் பரவியுள்ளதா..? ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்..

ஆசிரியர் - Editor I
இந்திய திரிபு B 1.617 கொரோனா வைரஸ் இலங்கையில் சமூகமட்டத்தில் பரவியுள்ளதா..? ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்..

இந்திய திரிபு வைரஸான B 1.617 இலங்கையில் சமூகமட்டத்தில் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய தீவிர ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் எதிர்ப்பு சக்தி விஞ்ஞான மூலக்கூற்று மருத்து ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள ஒருவரிடம் இந்திய திரிபு வைரஸ் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், சமூக மட்டத்தில் பரவியுள்ளதா? ன்பது தொடர்ச்சியாக ஆராய்ந்து பார்க்கவேண்டிய விடயமாகும். இந்தியா உள்ளிட்ட ஏனைய தெற்காசிய நாடுகளில் இந்த வகை இந்தியத் திரிபு வேகமாக பரவி வருகின்றது.

இலங்கை, கடல் வழியாக இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளது. படகு உள்ளிட்ட வேறு மார்க்கங்களில் பயணிகள் வரமுடியும். அதுகுறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.