மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன..! இந்தியா போன்ற நெருக்கடிநிலை உருவாகலாம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை...
நாட்டில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்திருக்கும் நிலையில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதுடன் இந்தியாவை போன்ற நிலை உருவாகலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
மருத்துவமனைகளில் தற்போது காணப்படும் நிலைமை குறித்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகள்
தங்களால் முடிந்தளவிற்கு நோயாளிகளை உள்வாங்கிவிட்டன எனவும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்த சங்கத்தின் சார்பில் பிரசாத் கொலம்பகே கருத்து தெரிவிக்கையில்,
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் மருத்துவமனை கட்டில்களின் எண்ணிக்கையில் பெரும் பற்றாக்குறை நிலவுவதாலும் மருத்துவமனைகள் கிசிச்சை வழங்ககூடிய எல்லையை கடந்துவிட்டதாலும்
இந்தியாவின் நிலை உருவாகலாம் என அவர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக தெளிவான திட்டங்களை நாங்கள் முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரசிற்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை கொண்டுள்ளவர்களிற்கு வீடுகளில் சிகிச்சை வழங்கலாம் என்பது குறித்து அறிவூட்டும் நிகழ்ச்சிதிட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்து;ளளார்.
தீவிரகிசிச்சை பிரிவுகளின் கட்டில்களின் எண்ணிக்கை 100 கடந்து விட்டன என தெரிவித்துள்ள கொலம்பகே நிலைமை ஒரு எல்லைக்கு அப்பால் சென்றால் சுகாதார துறை கையாள முடியாத
நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.