SuperTopAds

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து!! -இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது-

ஆசிரியர் - Editor II
தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து!! -இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது-

பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள தண்ணீரில் கலந்து குடிக்கும் டி.ஆர்.டி.ஓ மருந்து, கொரோனா நோக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் குறையவில்லை. தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வாக சொல்லப்படுகிறது. 

அந்நாட்டில் தற்போது 3 வகையான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கொனாரோவுக்கு எதிரான 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது. 

வாய்வழியாக உட்கொள்ளும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும். டி.ஆர்.டி.ஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளன. 

இந்த மருந்து வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன், ஒட்சிஸனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையை குறைக்கிறது என பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது. 

எனவே, அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இதையடுத்து 2-டிஜி மருந்து டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மருந்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.