யாழ்.கொடிகாமம் சந்தை செவ்வாய் கிழமை திறக்கப்படலாம்! மாகாண சுகாதார அமைச்சு கொவிட் செயலணிக்கு பரிந்துரை..

கொரோனா தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள கொடிகாமம் சந்தையை மீள திறப்பதற்கான பரிந்துரையை தேசிய கொவிட் செயலணிக்கு மாகாண சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
எழுமாற்று பரிசோதனையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சந்தை முடக்கப்பட்டது. இந்நிலையில் முடக்கப்பட்டுள்ள சந்தையை மீள திறக்கலாம் என
மாகாண சுகாதார அமைச்சு பரிந்துரை வழங்கியுள்ளபோதும் கொவிட் செயலணி அனுமதியை இதுவரை வழங்கவில்லை. என தெரியவருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிழமை திறக்கப்படலாம்
என கூறப்படுகிறது.