யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..! அடுத்த 3 நாட்களுக்கு கண்காணிப்பு மிக..மிக இறுக்கமாக இருக்கும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..! அடுத்த 3 நாட்களுக்கு கண்காணிப்பு மிக..மிக இறுக்கமாக இருக்கும்..

யாழ்.மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளதுடன், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. நேற்றைய தினம் மாத்திரம் 67 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் தேசிய மட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட 

சில நிபந்தனைகளை கட்டுப்பாடுகளையும் மாவட்டத்திலும் அமுல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அந்த வகையில் இன்று இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை கொரானா ஒழிப்பு மத்திய நிலையத்தினால் பயணதடை விதிக்கப்பட்டுள்ளது.  

இந்தப் பயணத் தடை காலத்தில் பொது போக்குவரத்து முற்றாக தடைபடும் கடைகள் மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு இருக்கும். ஆனால் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மேலும் இந்த பயணத் தடை காலத்தில் பலர் தமக்கு ஊரடங்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுகின்றார்கள். 

பொதுமக்கள் ஒரு விடயத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும் இந்த பயணத்தடை என்பது பொதுமக்கள் இந்த நிலமையினை அனுசரித்து வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்திற்கு பொதுமக்கள் அனுமதி கோருவதை நிறுத்திக் கொள்ளுங்கள் அயல் நாட்டிலிருந்து எமது பகுதிக்கு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் 

அந்த நிலைமை அனுசரிக்கப்படாத நிலைமை கவலை அளிக்கின்றது எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பாதிப்பினை ஏற்படுத்த முன்வராது தமது குடும்பத்தையும் சமூகத்தையும் எமது மாவட்டத்தினை தொற்றிலிருந்து பாதுகாக்க 

அனைவரும் முன்வர வேண்டும் அத்தோடு உங்களுடைய பகுதி கிராம சேவகர் மற்றும் அப்பகுதி அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொற்றிலிருந்து உங்கள் பகுதியினை பாதுகாக்கவேண்டும். எனவே இந்த பயண கட்டுப்பாடானது 

தொற்றினை கட்டுப்படுத்துவதற்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது .எனவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த பயண கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் அரசாங்கத்தின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், 

கைதுகள் இடம்பெற்றுவருகின்றன எனவே யாழ்.மாவட்டத்திலும் அரசின் சுகாதார சட்ட திட்டங்களுக்கு எதிராக செய்யப்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து தம்மையும் 

தமது மாவட்டத்தினையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு