அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் கிடையாது..! அரசு தீர்மானம், உதய கம்மம்பில அறிவிப்பு..
நாட்டில் மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவொரு அசௌகரியமும் உண்டாகாது. என அமைச்சர் உதய கம்மம்பில கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அத்தியாவசிய சேவைகள்,
ஏற்றுமதி சார்ந்த தொழில்கள், வேளாண்மை மற்றும் மீன்வளத் தொழில் ஆகியவை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் செயற்படும் என்றும் குறிப்பிட்டார். முழு நாட்டிற்கும் ஒரே நேரத்தில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக,
கொரோனா தொற்று எண்ணிக்கையை கருத்திற்கொண்டு கட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவை தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். பயணக் கட்டுப்பாடுகள் குறித்த முடிவு அமைச்சரவையால் எடுக்கப்பட்டது.
என்றும் கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியால் அல்ல என்றும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.