யாழ்.பருத்துறையில் வெதுப்பகம் முடக்கப்பட்டது..! பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் சுகாதார பிரிவு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறையில் வெதுப்பகம் முடக்கப்பட்டது..! பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் சுகாதார பிரிவு நடவடிக்கை..

யாழ்.பருத்தித்துறை - நெல்லியடியில் உள்ள பிரபல வெதுப்பக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையல் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வெதுப்பகம் முடக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் குறித்த வெதுப்பக பணியாளருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சுகாதார பிரிவினால் வெதுப்பகம் முடக்ப்பட்டுள்ளது. 

மேலும் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், வெதுப்பகத்தில் தொற்று நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

Radio