மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு..! இராணுவ தளபதி வழங்கியுள்ள விளக்கம், தடுப்பூசி வழங்கல் பணிகளில் இராணுவம்..
நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்படாது. ஆனால் அடுத்த சில நாட்களில் மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படலாம். என இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார், இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் மாகாணங்களிற்கு இடையில் செயற்படும் விதத்தில் அத்தியாவசிய சேவைகள் வலுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளைஇலங்கையில் தற்போது கொரோனாபரவல் தீவிரமடைந்து வருவதனால்
அதனை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டிற்குள் வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள் இதன் போது கலந்துரையாடினர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயும் பங்கேற்றார். மேல் மாகாணத்தில் தடுப்பூசி திட்டத்தினை விரைவுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும், மாவட்டளவில் ஆய்வக வசதிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுபவர்கள் முடிவு கிடைக்கும் வரை வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இதன் போது தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சிகிச்சை நிலையங்களுக்கும் போதுமான ஒக்சிஜன் வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுதடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகளில் படையினரை பயன்படுத்தவுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.