SuperTopAds

நாட்டில் கொரோனா அபாயம் தீவிரமாகிறது..! ஒட்சிசன், செயற்கை சுவாச கருவிகள் வழங்குமாறு பிரதமர் சீனாவிடம் கோரிக்கை

ஆசிரியர் - Editor I
நாட்டில் கொரோனா அபாயம் தீவிரமாகிறது..! ஒட்சிசன், செயற்கை சுவாச கருவிகள் வழங்குமாறு பிரதமர் சீனாவிடம் கோரிக்கை

நாட்டில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் ஒட்சிசன் மற்றும் செயற்கை சுவாச கருவிகளை பெறுவதற்கு பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ சீனாவின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்திற்கு பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவரது அலுவலகம் அனுப்பிவைத்துள்ள வேண்டுகோளில் ஒக்சிசன் மற்றும் செயற்கை சுவாசக்கருவிகளை வழங்குமாறு கோரும் வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

சீன தூதரக அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளதுடன்  கூடிய விரைவில் இவற்றை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட முழு பிராந்தியமும் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை  பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளை முன்னுரிமைக்குரிய விடயமாக கருதப்போவதாக சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ உதவிகள் என்ற அடிப்படையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் வழங்குவதற்கு சீன அரசாங்கம் முயலும் என அவர் தெரிவித்துள்ளார்.

நேரமே முக்கியமான உங்களிடம் பணமிருந்தாலும் நீங்கள் தொழிற்சாலைக்கு சென்றால் காத்திருக்கவேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கைக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நடவடிக்கையை சீனா துரிதப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் அதன் அயல்நாடுகளான நேபாளம் பங்களாதேஸ் போன்றவற்றிலும் பெருந்தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள சீன தூதரக அதிகாரி பல நாடுகள் மருத்துவபொருட்களை 

பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளன ஆனால் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை அடிப்படையாக கொண்டு இலங்கையின் வேண்டுகோளிற்கு முன்னுரிமை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.