SuperTopAds

வடமாகாண ஆளுநர் மாற்றமா?

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் மாற்றமா?

வடமாகாண ஆளுநர் மாற்றம் தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வழங் கப்படவில்லை. என கூறியிருக்கும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், ஆளுநர் மாற்றப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் தமக்கு தெரியாதெனவும், ஆளுநராக றெஜினோல்ட் கூரேயே இப்போதும் பதவி வகிக்கிறார். எனவும் கூறியிருக்கின்றார்.

ஜனாதிபதியின் பாக்கிஸ்தான் விஜயத்திற்கு முன்னர் 9 மாகாணங்களினதும் ஆளுநர்களுடன் ந டத்திய சந்திப்பில் ஆளுநர்களை மாற்றம் செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், ஆளுநர்களுடைய பதவிக்காலம் 3 வருடங்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளமையாலேயே இவ் வாறு ஆளுநர்களை மாற்றம் செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் தகவ

ல்கள் வெளியாகின்றது. இதன்படி மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஷ்வரன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஆளுநர்கள் ஜனா

திபதியுடன் சந்தித்தமை தொடர்பாக அறிந்திருக்கிறோம். ஆனால் ஆளுநர் மாற்றம் செய்யப்ப ட்டமை தொடர்பாக நாங்கள் அறியவில்லை. அது தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல் கள் எவையும் எமுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் வடமாகாண ஆளுநர் மாற்றப்பட்டுள் ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றமையை நாங்கள் அறிந்துள்ளோம். எனவே

 வடமாகாண ஆளுநர் இதுவரையில் மாற்றம் செய்யப்படவில்லை. வடமாகாண ஆளுநரா க றெஜினோல்ட் கூரேயே தொடர்ந்தும் பதவி வகித்து வருகின்றார். தற்போது கொழும்பில் இ ருக்கும் ஆளுநர் றெஜினோல்ட் கூரே 29ம் திகதி வடமாகாணத்திற்கு வருகிறார். எனவும் கூ றியுள்ளார்.