யாழ்.தீவுப்பகுதி மக்களுக்கு புதிய கட்டுப்பாடு..! தீவுப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்போருக்கும் மட்டும் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவுப்பகுதி மக்களுக்கு புதிய கட்டுப்பாடு..! தீவுப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்போருக்கும் மட்டும் அனுமதி..

கொரோனா தொற்று பரவல் காரணமாக யாழ்.அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி குறித்த தீவுகளில் வசிப்போரும், தீவுகளில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவோரும் மட்டும் படகு பயணத்தினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி, தவிசாளர், பிரதேச செயலர் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் நாளை முதல் மறு அறிவித்தல் வரை இந்நிலை நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீவுகளில் தற்போது மிகவும் மட்டுபடுத்தப்பட்ட மருத்துவ வசதிகளே காணப்படுகின்றன. அத்தோடு கொரோனா நோயாளிகளை அங்கிருந்து பிரதான நிலப்பிரப்பிற்கு இடமாற்றம் செய்வதிலும் 

பலத்த இடர்பாடுகள் உள்ளன. இப்பிரதேசங்களில் இதுவரை நோயாளிகள் இனங்காணப்படாத நிலையில் இப்பிரதேச மக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இதுவாகும் 

என ஊர்காவற்றுறை பிரதேச கொரோனா தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு