அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு சட்டரீதியாக விசாரிக்கப்பட்டதா? முதலமைச்சர் மீது சரமாரியாக கேள்வி.

ஆசிரியர் - Editor I
அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு சட்டரீதியாக விசாரிக்கப்பட்டதா? முதலமைச்சர் மீது சரமாரியாக கேள்வி.

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை குற்றவாளிகளாக அடையாப்படுத்திய முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அவர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற் கு சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. என குற்றஞ்சாட்டியுள்ள மாகாணசபை உறுப்பினர் கள், இதனை விசாரிக்க தெரிவு குழு ஒன்றை அமைக்கவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். 

வடமாகாணசபையின் 119வது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றி ருந்தது. இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் வாய்மொழி வினா ஒன்றை எழுப்பியிருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர் களை பதவி நீக்கிய முதலமைச்சர் அவர்கள் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க எடுத்துள்ள

மேலதிக நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அ மைச்சர் சபையை மாற்றுவதற்காகவே விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அமைச்சர் சபை மாற்றப்பட்டுள்ளதால் மேலதிக நடவடிக்கை தேவையற்றது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விவாதத்தின்போதே உறுப்பினர்கள் மேற்படி குற்றச்சாட்டை கூறியிருக்கின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக ச 

பையில் தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், எங்களை குற்றஞ்சாட்டி குற்றவாளிகளாக்கி வெளியில் விட்டவர்கள் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக என் ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? மக்களுடைய பணம் ஒரு ரூபாய் கூட களவாடாமல், எனக்கு வழங்கப்பட்டி ருந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் தண்டணை அனுபவிக்க நான் தயாராக இல்லை. எனவே எந்த

விசாரணைக்கும் நான் தயார். வெளியே மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும், என்னுடைய பிள்ளைகள் வீட்டில் கே ட்கும் கேள்விகளுக்கும், என்னுடைய பிள்ளைகளை பாடசாலையில் சக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியவில்லை. முதலமைச்சர் நியமித்த விசாரணை குழுவே என்னை குற்றமற்றவன் எனவும் என்னுடைய செயற்பாட்டுக்கு மாகாணசபை ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ள நிலையில் என்

மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதுபோதாதென 750 கோவைகளை நான் திருடி சென்றதாகவும், மருத்துவ உபகரணங்கள் கொள்வனவில் நான் ஊழல் செய்ததாகவும் ஊடகங்களுக்கு கூறியுள்ளீர்கள். ஆகவே அந்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அடுத்த அமர்வில் முதலமைச்சர் பதிலளிப்பார் எனவும் கூறி 

னார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு