நாட்டில் மேலும் 21 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படுகிறது..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் மேலும் 21 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படுகிறது..! இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில் மேலும் 21 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இதற்கமைய,இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த மற்றும் பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள்.

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகொல, குபுக்மிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவாலகம, கலஹாகம, கொஸ்வத்த, கபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, 

வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு மற்றும் தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள்.நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித கும்ஹஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவுமேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Radio