இந்திய திரிபுட்ட வைரஸ் விரைவாக மரணத்தை ஏற்படுத்துகிறது..! எமக்கு நல்லதல்ல சந்திம ஜீவந்தர எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இந்திய திரிபுட்ட வைரஸ் விரைவாக மரணத்தை ஏற்படுத்துகிறது..! எமக்கு நல்லதல்ல சந்திம ஜீவந்தர எச்சரிக்கை..

இந்திய திரிபுபட்ட வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை நமக்கு நல்ல செய்தியல்ல. என கூறியிருக்கும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர, விரைவாக மரணத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார். 

இது தொடர்பில் தனது ருவிற்றர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த மே 06ஆம் திகதி பெறப்பட்ட மாதிரி ஒன்றில், B.1.617.2 எனும் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தரவுகளின் அடிப்படையில் இது B1.1.7 எனும் திரிபுக்கு சமனானது என, அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கைக்கு நல்ல் செய்தி அல்ல என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு