டென்மார்க், மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவிய B.1.428 திரிபுபட்ட கொரோனா வைரஸ் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டது!

ஆசிரியர் - Editor I
டென்மார்க், மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவிய B.1.428 திரிபுபட்ட கொரோனா வைரஸ் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டது!

இலங்கையில் 6 வகையான திரிபுபட்ட கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு முடிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி B.1.17, B.1.428, B.1.411, B.1.525, B.1.617, B.1.357 ஆகிய திரிபுபட்ட வைரஸ் வகைகளே இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இவை இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், நைஜீரியா, டென்மார்க், மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய 

திரிபுபட்ட வைரஸ் வகைகளாகும். இதேவேளை டென்மார்க், மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவிய B.1.428 வகை கொரோனா வைரஸ் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக நல்லூர் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு