இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் D 1.617 (திரிபடைந்த கொரோனா வைரஸ்) தொற்றுள்ள ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார்..
இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் திரிபடைந்த டீ1.617 கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர், கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.