SuperTopAds

கொரோனா தொற்றுக்குள்ளான 130 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சையில்..! இருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளான 130 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சையில்..! இருவர் ஆபத்தான நிலையில்..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 130 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்றுவருவதாக கூறியிருக்கும் குடும்ப  சுகாதார  பணியகத்தின்  தாய்  மற்றும் குழந்தை  நல  பணிப்பாளர், மருத்துவர் சித்ரமாலி டி சில்வா, இரு கர்ப்பிணி பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான 100 க்கும் மேற்பட்ட  கர்ப்பிணித்  தாய்மார்கள்  தற்போது  மருத்துவமனைகளில்  சிகிச்சை  பெற்று வருவதாக  குடும்ப  சுகாதார பணியகம்  தெரிவித்துள்ளது.

தற்போது  சிகிச்சை பெற்று வரும் 130  கர்ப்பிணித்  தாய்மார்களில், இரண்டு  தாய்மார்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கொரோனா  தொற்றினால்  பாதிக்கப்பட்ட கர்ப்பிணித்   தாய்மார்களில்  பெரும்பாலானோர்  நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மற்றும் ஹோமாகம  ஆதார  வைத்தியசாலையிலும்  சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

 கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரை வீட்டில்  இருக்குமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்,  சுகாதார விதிமுறைகளை  கண்டிப்பாக  கடைபிடிக்க  வேண்டும்  எனவும்  அவர்  மேலும்  தெரிவித்துள்ளார்.