சீனா தயாரித்த சினோபார்ம் தடுப்பூசி!! -உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியது-

ஆசிரியர் - Editor II
சீனா தயாரித்த சினோபார்ம் தடுப்பூசி!! -உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியது-

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில், சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே சமயம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6 ஆவது தடுப்பூசி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Radio