SuperTopAds

பூநகரி- நாவற்குழி வீதியில் நேற்றிரவு விபத்து- ஒருவர் பலி!

ஆசிரியர் - Admin
பூநகரி- நாவற்குழி வீதியில் நேற்றிரவு விபத்து- ஒருவர் பலி!

பூநகரி - நாவற்குழி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில்   ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நாவாந்துறையைச் சேர்ந்த அந்தோனி கொன்சலஸ் எனும் 36 வயதுடைய குடும்பஸ்தர் இந்தச் சம்பவ இடத்தில் பலியானார்.  

கிளிநொச்சியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் தண்ணீர் பவுசருடன் மோதி நிலை தடுமாறிய போது, பின்னால் சென்ற கார் அவர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கடற்படையினருக்கு சொந்தமான குறித்த தண்ணீர் பவுசரின் சாரதியான கடற்படை சிப்பாய் ஒருவரும் காரின் சாரதியும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்ணீர் பவுசர் எவ்வித சமிக்ஞைகளும் இன்றி நடு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.