கிளிநொச்சியின் போர் வடுவான நீர்த்தாங்கி அகற்றப்படுகிறது!

கிளிநொச்சியில் போர் அழிவுகளை பறைசாற்றும் வகையில் அரசாங்கத்தினால் காட்சிப்படுத்தப்பட்டு வந்த, தண்ணீர்த் தாங்கியை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகருக்குக் குடி தண்ணீர் வழங்குவதற்காக நிறுவப்பட்டிருந்த தண்ணீர்த் தாங்கி போர்க் காலத்தில் இரண்டு தடவைகள் நிர்மூலமாக்கப்பட்டது.
கடந்த 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தண்ணீர்த் தாங்கியும் இறுதிப் போரின் போது வீழ்த்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த தண்ணீர்த் தாங்கி போர் முடிவுற்றதன் பின்னர் போர் ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
போரின் சான்றாகக் காணப்படும் தண்ணீர்த் தாங்கியை தென்னிலங்கை மக்களும் வெளிநாட்டவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வந்த நிலையில் தற்போது அது அகற்றப்பட்டு வருகின்றது.