நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டது..! இராணுவ தளபதி அறிவிப்பு..!
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மேலும் 5 மாவட்டங்களில உள்ள 8 கிரமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் கூறியுள்ளார்.
இதன்படி, நுவரெலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாரம்பிட்டிய, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும்,
பண்டாரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க காவல்துறை பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் திசவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.