இலங்கையர்கள் உள்நுழைய தடை விதித்த சிங்கப்பூர்..! கொரோனா தொற்று தீவிரமடைந்ததன் எதிரொலி..
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து இலங்கை பயணிகள் தமது நாட்டுக்குள் உள்நுழைவதை சிங்கப்பூர் அரசாங்கம் தடை செய்துள்ளது.
கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்குச் சென்ற பயணிகள் சிங்கப்பூர் வருவதையும் அந்த நாடு தடை செய்துள்ளது.
பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் பயணிகளுக்கும் சிங்கப்பூர் பயணத் தடை விதித்துள்ளது.
நேற்று இரவு முதல் இந்தத் தடை அமுலுக்கு வருகின்றது என அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளின் பயணிகள் சிங்கப்பூரின் ஊடாக வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.