அச்சமூட்டும் என்பதற்காக உண்மையை மறைக்க முடியாது! மருத்துவமனையில் படுக்கை இல்லை, நோயாளி வீட்டிலேயே உயிரிழப்பு, சுகாதார அதிகாரி கருத்து..
மருத்துவமனைகளில் கட்டில் வசதியில்லாமையினால் நோயாளி வீட்டிலேயே உயிரிழந்த்தாக மேல்மாகாண சுகாதார திணைக்களத்தின் செயலாளர் காமினி தர்மசேன கூறியுள்ளார்.
கொரோனா நோயாளர்களிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் படுக்கை வசதிகள் முற்றாக நிரம்பிவிட்டன.
இது அச்சமூட்டும் நடவடிக்கை ஆனால் மறைப்பதற்கு எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நோயாளர்கள் சிகிச்சையின் பின்னர் வெளியேறினாலே ஏனையவர்களிற்கான படுக்கை வசதியை வழங்முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் இடவசதி இல்லாததால் கொரோனா நோயாளியொருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.