SuperTopAds

10 தொடக்கம் 14 நாட்களில் நோய் தீவிரமடைகிறது..! கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் இதுதான், இராணுவ தளபதி விளக்கம்..

ஆசிரியர் - Editor I
10 தொடக்கம் 14 நாட்களில் நோய் தீவிரமடைகிறது..! கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் இதுதான், இராணுவ தளபதி விளக்கம்..

இலங்கையில் தற்போது பிரித்தானிய திரிபடைந்த கொரோனா தொற்று பரவுவதே உயிரிழப்புக்கள் அதிகரிக்க காரணம் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

முன்னரை போல இல்லாமல் தற்போது நோய் தொற்றிற்கு ஆளாகி பத்து முதல் 14 நாட்களிற்குள் பொதுமக்கள் கடும் பாதிப்பை  வெளிப்படுத்துகின்றனர் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

முன்னைய கொரோனா வைரஸ்களிடமிருந்து மாறுபட்ட விதத்தில் தற்போதைய வைரஸ் செயற்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் அதிகளவானவர்கள் தொற்றிற்குள்ளாகின்றனர் இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரிக்கி;ன்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் பத்து முதல் 14வது நாளில் குணமடைய தொடங்கினார்கள். என  தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக உயிரிழப்புகள் குறைவாக காணப்பட்டன 

ஆனால் புதிய வைரஸ் வேறுவிதத்தில் செயற்படுவதால் நாளாந்தம் ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் அதற்கு சமாந்திரமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.