SuperTopAds

தனிமையை உணரும் ஆண்களை புற்றுநோய் தாக்கும்!! -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்-

ஆசிரியர் - Editor II
தனிமையை உணரும் ஆண்களை புற்றுநோய் தாக்கும்!! -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்-

தனிமையில் இருப்பதாக உணரும் நடுத்தர வயது ஆண்களுக்கு புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு என ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. 

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'சைக்காட்டரி ரிசர்ச்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

தனிமையில் இருக்கும் போது அவர்கள் புகைப்பிடித்தலுக்கு தூண்டப்படுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பு, புற்றுநோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

1980 களில் கிழக்கு பின்லாந்தை சேர்ந்த 2,570 நடுத்தர வயது ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்களின் உடல்நலம் மற்றும் இறப்பு விகிதம் 2021 வரை கண்காணிக்கப்பட்டுள்ளன.

இதில் 649 ஆண்கள் அதாவது பங்கேற்பாளர்களில் 25 வீதம் பேர் புற்றுநோய்க்கு ஆளாகினர். மேலும் 283 ஆண்கள் (11 வீதம்) புற்றுநோயால் இறந்தனர். இதை புற்றுநோய் அதிகரிப்புக்கு தனிமை ஒரு முக்கிய காரணியாக உணரப்பட்டது. 

தனிமை உணர்வு புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது என்று இந்த ஆய்வின் மூலமாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.