சந்தையில் விற்பனை செய்யப்படும் என் - ஜாய் தேங்காய் எண்ணையில் “அஃப்லாடாக்சின்” நஞ்சு..! சந்தையிலிருந்த அகற்ற நடவடிக்கை, பொதுமக்கள் நுகரவேண்டாம்..

ஆசிரியர் - Editor I
சந்தையில் விற்பனை செய்யப்படும் என் - ஜாய் தேங்காய் எண்ணையில் “அஃப்லாடாக்சின்” நஞ்சு..! சந்தையிலிருந்த அகற்ற நடவடிக்கை, பொதுமக்கள் நுகரவேண்டாம்..

“என்-ஜாய்” என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணையை சந்தையிலிருந்து திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு சபை கூறியுள்ளது. 

என்-ஜாய் தயாரிப்புகள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் உள்ளமை கண்டறியப்பட்டதாக 

நுகர்வோர் விவகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.இருப்பினும் உள்ளூர் கொப்பராவைப் பயன்படுத்தி என்-ஜாய் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்பட்டது. 

என நுகர்வோர் விவகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின்படி, 

சந்தையில் உள்ள அனைத்து தேங்காய் எண்ணெயிலும் நச்சுத்தன்மை உள்ளதாக என்பது குறித்து நுகர்வோர் விவகார சபை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பேரதெனிய பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களில் என்-ஜாய் தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையிலும் அந்த எண்ணெயில் அஃப்லாடாக்சின் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தேங்காய் எண்ணெயை சந்தையில் இருந்து அகற்ற நுகர்வோர் விவகார சபை முடிவு செய்துள்ளது.அதேநேரம், கிராண்ட்பாஸில் உள்ள 

என்-ஜாயின் எண்ணெய் களஞ்சியசாலைக்கு நுகர்வோர் விவகார சபை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு