SuperTopAds

நாடு முடக்கப்படுவதற்கான திட்டம் இல்லை. ஆனால் முடக்கலுக்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது..! இராணுவ தளபதி விளக்கம்..

ஆசிரியர் - Editor I
நாடு முடக்கப்படுவதற்கான திட்டம் இல்லை. ஆனால் முடக்கலுக்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது..! இராணுவ தளபதி விளக்கம்..

நாடு முடக்கலுக்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது. என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருப்பதாக “மோர்ணிங்” ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

தற்போது தேசியரீதியிலான முடக்கலிற்கான திட்டங்கள் எதுவும் இல்லாதபோதிலும் நாட்டில் கொரோனாவைரஸ் நிலவரம் மிகவும் ஆபத்தானதாக மாறிவரும் நிலையில் 

தேசிய முடக்கலை நிராகரிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய முடக்கல் அல்லது மாகாணங்கள், மாவட்டங்களிற்கு இடையிலான முடக்கல் 

அல்லது மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற கேள்விக்கு தற்போது அவ்வாறான நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கவில்லை. 

ஆனால் தேவைப்பட்டால் அது குறித்து பரிசீலிப்போம் என தெரிவித்துள்ளார்.தற்போது தேவைப்பட்டாலன்றி போக்குவரத்து தடைகளை விதிக்கப்போவதில்லை முழுமையான முடக்கல் நிலைக்கான திட்டம் இல்லை. 

என தெரிவித்துள்ள இராணுவதளபதி ஆனால் இதற்கான சாத்தியக் கூறுகளை நிராகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.