நாட்டை உடனடியாக முடக்காவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும்..! பொதுச் சுகாதார பிரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
நாட்டை உடனடியாக முடக்காவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும்..! பொதுச் சுகாதார பிரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

நாட்டில் கொரோனா பரவல் தீவரமடைந்துவரும் நிலையில் நாட்டை உடனடியாக முடக்காவிட்டால் எதிர்காலத்தில்  தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படுமெனவும் தொற்று பரவல் நிலைமையை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையில் நாட்டை முடக்குவது தவிர வேறு வெற்றிகரமான வழியில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்துக்கும் அதிகமாகும். இந்நிலைமையை குறைத்து மதிப்பிட முடியாது.

நாடு முழுவதும் துணை கொத்தணிகள் உருவாகி வருகின்றன. நாட்டை முடக்காமல் துணை கொத்தணிகளை கட்டுப்படுத்த முடியாதென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு