SuperTopAds

பாடசாலைகள் 30ம் திகதிக்கு பின் திறக்கப்படுமா..? மே 2ம் திகதியே தீர்மானம் என கல்வியமைச்சர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் 30ம் திகதிக்கு பின் திறக்கப்படுமா..? மே 2ம் திகதியே தீர்மானம் என கல்வியமைச்சர் விளக்கம்..

நாட்டில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக பாடசாலைகள் 30ம் திகதிவரை மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திறப்பது தொடர்பில் மே 2ம் திகதி தீர்மானிக்கப்படும். 

மேற்கண்டவாறு கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 30ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 

இது தொடர்பில் இறுதிமுடிவு எடுக்கப்படும். இலங்கையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், 

முன்பள்ளிகளும்,  அறநெறிப் பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. இதேவேளை, மே 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் 

கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.